கலப்படம் செய்யப்பட்ட தேயிலை ஏற்றுமதியைத் தடுக்கும் முயற்சியில் இலங்கை தேயிலை சபை தேயிலை மாதிரிகளை ஏலத்தில் ஆய்வு செய்ய உள்ளது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.
தேயிலை பதப்படுத்தும் போது சிறிய அளவு சர்க்கரை இயற்கையாகவே உருவாகிறது என தெரிவித்த அவர் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி செயற்படும் எந்தவொரு தேயிலை நிறுவனத்திற்கும் எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
கூடுதல் சர்க்கரையைச் சேர்ப்பதன் மூலம் தேயிலை கலப்படம் செய்யும் தேயிலை தொழிற்சாலைகள் மூன்று மாதங்களுக்கு மூடப்படும் (சீல் வைக்கப்படும்) என திசாநாயக்க வலியுறுத்தினார்.
இதேவேளை குறித்த தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் தடையை ரத்து செய்ய கோரும் எந்தவொரு கோரிக்கையும் பரிசீலிக்கப்படாது என்று அவர் எச்சரித்தார்.
தற்போது, 13 தேயிலை நிறுவனங்கள் கலப்படம் செய்யப்பட்ட தேயிலை விற்பனை செய்துள்ளமை கண்டறியப்பட்டு பின்னர் மூடப்பட்டுள்ளது.
பரிசோதகர்கள் தேயிலை மாதிரியில் அதிக அளவு சர்க்கரையை சேர்ந்திருப்பதை கண்டறிய விசேட இயந்திரங்களைப் பயன்படுத்துவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க