உள்நாட்டு செய்திகள்புதியவை

‘அரசியல் தீர்வு விடயத்தில் தமிழினம் பந்தாடப்படுகிறது’

அரசியல் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மூன்று பிரிவுகளாக செயற்பட்டு தமிழினத்தை பந்தாடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யுத்தம் முடிந்த பின்னர் கூட்டமைப்பின் தலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு சுமத்தப்பட்டது. அதற்கான நகர்வுகளையும் கூட்டமைப்பு முன்னெடுத்திருந்தது. எனினும் அந்த நகர்வில் பின்னடைவு ஏற்பட்டன.

இரண்டு கட்சிகள் ஒன்றாக இணைந்து ஆட்சியமைத்தபோது, அரசியல் தீர்வு குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. , ஜனாதிபதியின் யினால் புதிய அரசு உருவாக்கப்பட்ட நிலையில் எமது இனம் பந்தாடப்பட்டு வருகிறது.

இதனால் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக மீள்பரிசீலனை செய்யும் நிலை  ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க