தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளியாக இருந்துகொண்டு வாக்களித்த மக்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவது போல பம்மாத்து காட்டுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையைில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு தொடர்பில் அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என கூட்டமைப்பு சொல்கிறது.
எனினும் அவர்கள் அரசாங்கத்தின் பங்காளியாகவே இருந்து வருகின்றது.
கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்க்கட்சி தலைவருக்கான அனைத்து வரப்பிரசாதங்களும் அவருக்கு வழங்கப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க