உள்நாட்டு செய்திகள்புதியவை

‘ஹெய்லிஸ் நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை’

ஹெய்லிஸ் நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக 130 கழிவுக் கொள்கலன்களை இறக்குமதி செய்தமை தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் (சிஇஏ) மற்றும் முதலீட்டு சபை (பிஓஐ) ஆகியவை சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளன.

பொருளாதார அபிவிருத்திக்கான கைத்தொழில் மேற்பார்வைக் குழு (எஸ்ஓசி) இதனை தெரிவித்துள்ளது.

குறித்த கழிவுக் கொள்கலன்கள் 2017 முதல் ஹேலிஸ் இலவச மண்டலத்தில் கிடக்கின்றன, மேலும் அவை நாட்டிலிருந்து முழுமையாக மறு ஏற்றுமதி செய்யப்படவில்லை என எஸ்.ஓ.சி யின் தலைவர் ஹர்ஷன ராஜகருணா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர்கள் கழிவுகளை இறக்குமதி செய்தமை மிகப்பெரிய குற்றமாக உள்ளது (ஹெய்லிஸ்) என்று ராஜகருண செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க