பிரதம நீதியரசர் மற்றும் சில உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் இடையே கலந்துரையாடலை நடத்த வெளியுறவு அமைச்சு நடவடிக்கை எடுத்ததாக சுமத்தப்பட்ட குற்றத்தை அவ்வமைச்சு மறுத்துள்ளது.
இன்று (ஜூலை 25) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது வெளியுறவு துறை அமைச்சர் திலக் மாரப்பன இதனை தெரிவித்துள்ளார்,.
ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ட் வூலே குறித்த அதிகாரிகளை நீதித்துறையில் சந்திக்க மட்டுமே முயன்றார் என்றும், வெளியுறவு அமைச்சு இந்த கோரிக்கையை நீதி செயலாளரிடம் தெரிவித்ததாகவும் அவர் விளக்கியுள்ளார்.
ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் தற்போது இலங்கையில் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை குறித்து மதிப்பீட்டை நடத்தி வருகிறார்.
அறிக்கையாளரின் வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து ஜூலை 5 ஆம் திகதி சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் ஒரு முன் ஆயத்த கூட்டம் நடத்தப்பட்டது.
வருகை தந்துள்ள தூதரின் வேண்டுகோளை தெரிவிக்க அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க