உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

ஸ்ரீ ஞான வைரவா் ஆலயம் இடிக்கப்பட்டது: விக்கிரகங்கள் மாயம்

சுண்டுக்குளி பகுதியில் அமைந்திருந்த மிக பழமையான இந்து ஆலயம் ஒன்று இடித்து அழிக்கப்பட்டிருப்பதுடன், ஆலயத்திலிருந்த விக்கிரகம் எடுத்து செல்லப்பட்டிருக்கின்றது.

மூலாய் வீதி ஸ்ரீ ஞான வைரவா் ஆலயம் மிக நீண்டகாலமாக அப்பகுதி மக்களால் வழிபடப்பட்டு வந்ததுடன், அவர்களால் பராமாிக்கப்பட்டு வந்தது.

நேற்று நள்ளிரவு ஆலயத்திற்குள் நுழைந்த சிலா் ஆலய கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கியதுடன், விக்கிரகங்களை எடுத்து சென்றுள்னா் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஆலயத்தை நிா்வகித்துவந்த சிலரும், பொதுமக்களும் இணைந்து யாழ்.காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருக்கின்றனா்.

இது குறித்து அவா்களை தொடா்பு கொண்டு கேட்டபோது,

ஆலயத்தை உருவாக்கியவாின் பிள்ளைகளுக்கிடையிலான சில முரண்பாடுகளாலேயே ஆலயம் உடைக்கப்பட்டிருப்பதாகவும் இது மிக பழமையான ஆலயம் எனவும் குறிப்பிடுகின்றனர்.

இதுவேளை ஆலயம் இடிக்கப்பட்டமை தொடா்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.

இதேவேளை சிவசேனை அமைப்பின் தலைவா் மறவன்புலவு சச்சிதானந்தம் இதனை பாா்வையிட்டுள்ளாா்.

இந்த ஆலயத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா ஒரு தொகை நிதி ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க