உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பிரதேசசபை உறுப்பினருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாக தெரிவிப்பு

நாத்தாண்டியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட அமைதியின்மையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட,நாத்தாண்டிய பிரதேச சபை உறுப்பினர் உபுல் சாந்த வை எதிர்வரும் ஓகஸ்ட் 7 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மாரவில பகுதியில் நிகழ்த்தப்பட்ட 27 வன்முறை சம்பவங்களில் தொடர்புடையதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பில் கொஸ்வத்த காவல்துறையினர் மாரவில மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், தான் அமைதியின்மையுடன் தொடர்புபடவில்லை என குற்றம் சாட்டப்பட்ட நபர் மனு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை  திறந்த நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதி மஹேந்திரராஜா , கொலை, தீ வைத்தல், மற்றும் சொத்துக்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் போது மே 13 அன்று நடந்த வன்முறை சம்பவங்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் தலைமை தாங்கினார் என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

இதேவேளை இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபர் ஜப்பானுக்கு சென்ற விடயம் தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க