உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சூரியவெவ பகுதியில் விபத்து; 11 வீரர்கள் காயம்!

இராணுவ ட்ரக் வாகனமொன்று, சூரியவெவ- மீகஹஜதுர விவசாய சேவை மத்தியநிலையத்துக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 11 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

சாரதி பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ட்ரக் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க