புகையிலைத் தொழில்துறையை அவதானிப்பதற்கான தெற்காசியப் பிராந்திய கூட்டமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு காலிமுகத்திடல் விடுதியில் கடந்த 15 ஆம்திகதி மேற்படி கூட்டமைப்பு SARC –CCT அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரச் சபையின் தலைவர் வைத்தியர் பாலித்த அபேகோன் கலந்து கொண்டதோடு தெற்காசிய பிராந்தியத்தில் புகையிலை தொழில்துறைய கண்காணித்தலின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தார்.
இதில் கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சந்திரிகா விஜயரட்ண, புகையிலைக் கட்டுப்பாட்டு செயற்பாட்டில் ஈடுபடும் உள்ளுர் மற்றும் சர்வதேச பங்காளர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து கட்டுநாயக்க ஆமோரா லகூன் ஹோட்டலில் மூன்றுநாள் திறன் மேம்பாட்டுப் பட்டறையும் இடம்பெற்றது.
இதில் SARC –CCT தொழிநுட்ப குழு, இங்கிலாந்தின் பாத் பல்கலைக்கழகம், புகையிலைக் கட்டுப்பாட்டு மற்றும் ஆராய்சிக் கல்வி மையம், கலிபோர்னியா சன் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகம் பிரேசில் மற்றும் தென்னாபிரிக்க புகையிலைக் கண்காணிப்பு ஆய்வு மையங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இது தெற்காசியாவில் புகையிலைத் தொழில்துறை அவதானிக்கும் நிலையமாகச் செயற்பட உள்ளது. புகையிலைத் தொழில் துறை அவதான நிலையம் (CCT) இந்த அமைப்புக்கு நிபுணத்துவத்தை வழங்குவதோடு பராமரிப்பில் ஒருங்கிணைக்கும் அமைப்பாகச் செயற்பட உள்ளது.
காசநோய் மற்றும் நுரையீரல் நோய்க்கு எதிரான சாவதேச ஒன்றியம் இத் திட்டத்திற்கு நிதியுதவியளிக்கின்றது.
இந்தியா, பங்களதேஷ், பாகிஸ்தான், நேபாளம், மாலைத்தீவு,ஆப்கானிஸ்தான் மற்றும் பூட்டான் போன்ற நாடுகளின் பங்குதாரர் நிறுவனங்கள் SARC –CCT உடன் இணைந்து செயற்பட உள்ள மை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க