யாழ் மாவட்டத்தில் 1253 பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனங்கள் அடுத்தமாதம் 1ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
இந்த நியமனங்கள் கொழும்பில் வழங்கப்படவிருப்பதாக யாழ் மாவட்ட செயலக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பெயர் பட்டியல் யாழ் மாவட்ட செயலக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற நேர்முக தேர்வில் கலந்துக்கொண்டவர்கள் மத்தியிலிருந்து இவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள், மீள குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சினால் இந்த நியமனங்கள் தொடர்பில் பெயர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க