எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச நேற்று அமெரிக்க தூதுவர் அலய்னா பி. டெப்லிடஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றார்.
குறித்த பேச்சுவார்த்தை நேற்று எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்றிருக்கின்றது.
இதன்போது பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று இருக்கின்றன.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தொடர்பிலும் அதைப்போல தற்போதைய அரசியல் நிலை தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டிருக்கின்றன.
இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் ஜி எல் பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான கெஹெலிய ரம்புக்வெல ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
குறிப்பாக என்னென்ன விடயங்கள் இதன்போது பேசப்பட்டன என்ற தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க