உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

காணாமல்போனவர் இலங்கையில்; ஆட்கொணர்வு மனு மதுரையில் தாக்கல்!

மீன் பிடிக்க சென்றிருந்தபோது காணாமல் போனதாக கூறப்படும் தமது தந்தை இலங்கையில் நாடோடியாக வாழ்ந்து வருவதாக கூறி அவரை மீண்டும் திருப்பி அழைக்க வேண்டுமென கோரும் வகையில் மதுரை மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.

குறித்த மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த மனு விசாரணை செய்ய ஆகஸ்ட் 14ஆம் திகதி ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

தமிழ்நாட்டை சேர்ந்த சரவணன் சுந்தரி ரமேஷ் என்ற பெண் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

எஸ். வரதன் 1996 ஆம் ஆண்டு மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பின்னர் அவர் உயிரிழந்து விட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அடுத்து தனது அப்பாவை தேடும் பணியை இடைநிறுத்தி தாக மனுதாரர் தெரிவித்திருக்கின்றார்.

எனினும் 1998 ஆம் ஆண்டு தனது தந்தை அங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டபோது அதுவும் உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் 21 வருடங்களுக்கு பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு கடந்த மார்ச் மாதம் 1 ஒரு யூடியூப் வீடியோ ஒன்றின் மூலம் தனது தந்தை இலங்கை நாட்டில் நாடோடியாக கொழும்பில் இருப்பதாக தெரிய வந்திருக்கின்றது.

எனவே அவரை உடனடியாக நாட்டுக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் ஆட்கொணர்வு மனுவில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

கருத்து தெரிவிக்க