சினிமா

ஜோதிகாவின் அதிரடி ஆக்ஷனில் ‘ஜாக்பாட்’

நடிகை ஜோதிகா தற்போது ‘ஜாக்பாட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதற்குரிய ப்ரமோஷன் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது. முதல்கட்டமாக கணவர் சூர்யாவின் பிறந்தநாளை அடுத்து  ‘ஜாக்பாட்’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியிருந்தது. அதில் ஜோதிகா பொலிஸ் வேடத்தில் நடித்துள்ளதுடன்  அவருடன்  ரேவதி, யோகிபாபு, மன்சூரலிகான், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். ஆனந்தகுமார் ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ளது. இப்படம் தணிக்கை குழுவிடமிருந்து ‘யூ’ சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் இந்த படமும் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க