நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மழையுடனான வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு 9 மணிமுதல் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் நிலவும் காற்றுடன் கூடிய மழை இன்று முதல் படிப்படியாக குறையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கருத்து தெரிவிக்க