தமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தழிழ் மொழி வாழவேண்டும் மற்றும் நாங்கள் மொழி அடையாளம் கொண்டவர்கள் அதனால் தமிழை தாயாக கொண்டிருங்களென வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமையை தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்கும் ‘தேசிய பால் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின்’ வடமாகாண அங்குரார்ப்பண நிகழ்வு ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் இன்று (23) காலை யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் பெண்கள் கல்லூரியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அவர்களின் இந்த திட்டம் சுமார் 4 பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இடம்பெறுகின்றது. வடமாகாணத்தின் 5 பாடசாலைகளில் உத்தியோகபூர்வமாக இந்த நிகழ்வு ஒரே நேரத்தில் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஆரம்ப கல்விப் பிள்ளைகளின் போசணை நிலையை உயர்த்துவதற்காகவும், பிள்ளைகளை போசாக்குடனும் நலமுடனும் வளமுடனும் வாழவைக்கவேண்டும் என்பதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும் என்று ஆளுநர் சுரேன் ராகவன் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க