ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ஷவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் பெயர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள போதும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்குள் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இது தொடர்பாக கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலைமையில் சமல் ராஜபக்ஷவின் பெயரும் குறிப்பிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை கோதாபய ராஜபக்ஷவே வேட்பாளர் என தான் ஒருபோதும் குறிப்பிடவில்லையென மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க