தாய் தந்தையற்ற பிள்ளைகளை அருகில் உள்ள தேசிய பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருக்கிறார்.
ஏற்கனவே இந்த தாய் தந்தையற்ற பிள்ளைகளுக்கு தேசிய பாடசாலைகளில் அனுமதி வழங்கப்படுவதில்லை குறித்த அனுமதி அதிபர்களினால்
நிராகரிக்கப்படுகிறது. என்று ஒரு குற்றச்சாட்டு வெளிவந்தது.
இந்த இந்த நிலையிலேயே அமைச்சர் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.
இனிவரும் காலங்களில் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற தாய் தந்தையற்ற சிறுவர் இல்லத்தில் இருக்கின்ற சிறுவர்கள் அதைப்போல ஏனைய தாய் தந்தையற்ற சிறுவர் இல்லங்களில் உள்ளவர்கள் அருகில் உள்ள முக்கிய பாடசாலைகளிலும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற கட்டளையை அமைச்சர் விடுத்திருக்கிறார்.
கருத்து தெரிவிக்க