உள்நாட்டு செய்திகள்புதியவை

‘வில்பத்து பூங்காவை சுற்றியுள்ள வனப்பகுதி அழிக்கப்படாது’

வில்பத்து தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள கல்லாரு பகுதியில் உள்ள வன நிலங்களை அழிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என வன பாதுகாப்புத் திணைக்களம் இன்று (ஜூலை 22) நீதிமன்றத்தில் எழுத்து மூலம் அறிவித்தது.

குறித்த காடழிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் ,சட்ட ஆலோசகர் மூலம் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் மேற்படி உத்தரவாதம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் வன பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் விசாரித்த பின்னர் இந்த விடயத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் வழக்கின் பிரதிவாதியான சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை இன்றைய விசாரணையின்போது , இந்த உத்தரவாதத்தின் நகலை வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அரச சட்டத்தரணிகளை அறிவுறுத்தியது.

கருத்து தெரிவிக்க