உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சட்டவிரோத மரக்கடத்தல் தடுத்து நிறுத்தம்; சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோதமாக காடழிப்பு மிக வேகமாக இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு – ஒலுமடு  வனபரிபாலன அலுவலக பிரிவுக்குட்பட்ட துணுக்காய் வனபரிபாலன பிரிவின் ஐயன்குளம் வன பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து இன்று அதிகாலை சுற்றி வலைப்பூ ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகளை அறுத்து வாகனத்தில் ஏற்றிக்  கொண்டு செல்ல முற்பட்ட வேளை வளவள திணைக்கள அதிகாரிகளை கண்டதும் வாகனத்தில் வந்தவர்கள் தப்பிச் சென்ற நிலையில் வாகனமும் முத்திரை குற்றிகளும்  கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

ஒலுமடு வனபரிபாலன அலுவலர் ஆர்.எஸ்.டபிள்யூ. திசாநாயக்க அவர்களின் வழிகாட்டலில் துணுக்காய் பிரதேச வன அதிகாரி பி.டி.பி.கே.ஆர். குணசேகரவன வள அதிகாரி பி.எம் பத்திராஜா வை.டி.என் பத்மசிறி ஆகிய 3 பேரும் ஐயன்குளம் பகுதியில் இருந்து குறித்த மரக்கடத்தல் நடவடிக்கையை தடுத்து நிறுத்தினர்.

வாகனத்தையும் மரக்குற்றிகளையும்  கைது செய்து கொண்டு அவற்றை பி அறிக்கை ஊடாக இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்

இதன்போது கப் ரக வாகனம் ஒன்றும் பெறுமதியான நான்கு பாரிய முத்திரை குற்றிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மணல் அகழ்வு கருங்கல் அகழ்வு கிரவல் அகழ்வு மற்றும் மர வியாபாரம் என்பவற்றுக்காக காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்து தெரிவிக்க