பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேடபாளர் யார் என்ற சர்ச்சைக்கு ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி முடிவு கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்.
‘இதுவரையில் ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவிற்கு ஐவரது பெயர் முன் மொழியப்பட்டுள்ளது.
எமது அணியில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து கட்சிகளினதும் தீர்மானத்துக்கு அமைய ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்.
இதேவேளை சிறுபாண்மை இனத்தவர்களின் மக்களின் வாக்குகளை பெற முடியும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.
உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலே ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டன. சாட்டப்பட்ட குற்றங்கள் எதுவும் இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை.
தேர்தலில் வெற்றி பெற அரசாங்கம் தற்போது பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. தேர்தல் வெற்றிக்காக இம்முறை மேற்கொள்ளப்படும் தந்திரங்கள் செல்லுபடியாகாது’ என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க