உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

ஸ்ரீதலதா மாளிகையின் எசல பெரஹராவை முன்னிட்டு நடவடிக்கைகள்

சரித்திரப்புகழ் பெற்ற கண்டி ஸ்ரீதலதா மாளிகையின் எசல பெரஹராவை முன்னிட்டு பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளதாக திவயின நிலமே திலங்கா தேரர் தெரிவித்தார்.

ஸ்ரீ தலதா மாளிகை கட்டிடத் தொகுதியில் இடம் பெற்ற கண்டி பெரஹரா தொடர்பான ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 15ம் திகதி வரை கண்டி நகரில் 5 கிலோமீட்டர் சுற்று வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள சகல மது விற்பனை நிலையங்களும் மூடப்படும். அத்துடன் புகைத்தல் இல்லாத ஒரு வலயமாகவும் இது இருக்கும்.

மது மற்றும் புகைத்தல் தொடர்பான பொருட்கள் விற்பது தடைசெய்யப்படும்.

அத்துடன் சுரித்திரப்புகழ் பெற்ற மகாமலுவ என்ற இடத்தில் இருந்து பெரஹராவை பார்வையிட எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.

மேலும் பெரஹராவில் களியாட்ட நிகழ்வுகளும் தடைசெய்யப்பட உள்ளது.

கண்டி குயீன்ஸ் ஹோட்டல் நடைபாதையில் ஆசனங்கள் போடப்பட்டு பணத்திற்கு ஆசனங்கள் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகும். இம்முறை கண்டி மாநகர சபை மேற்படி அனுமதியையும் ரத்துச் செய்ய உள்ளதாக மாநகர சபை ஆணையாளர் சந்தன தென்னகோன் தெரிவித்தார்.

அதே நேரம் ஓகஸ்ட் 2ம் திகதி முதல் பெரஹரா உள் வீதிவலம் வரும் 5ம் திகதி முதல் 9ம் திகதி வரை கும்பல் பெரஹரா இடம் பெறும்.

ஓகஸ்ட் 10 முதல் 14 வரை மிக முக்கியமான ரந்தோலி பெரஹரா இடம் பெறும்.

15ம் திகதி பகல்பெரஹரா மற்றும் நீர் வெட்டு (தீர்த்தோட்சவம்) என்பன இடம் பெறும்.

கருத்து தெரிவிக்க