உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

உலக கிண்ண இறுதிப்போட்டி தொடர்பில் குமார் தர்மசேன வெளியிட்ட கருத்து

உலகக்கிண்ண கிரிக்கெட்டில் இறுதிப்போட்டியில் தான் மேற்கொண்ட ஒரு தீர்மானம் பிழையானது என்பதை அந்த போட்டியில் இலங்கையின் நடுவராக இருந்த குமார் தர்மசேன தெரிவித்திருக்கின்றார்

எனினும் இந்த தீர்மானம் தமது சகாவாக இருந்த நடுவர் அதேபோல போட்டி நடுவர் உட்பட்ட அனைத்துநடுவர்களுடனும் இணைந்தே வெளியிடப்பட்டது. என்ற கருத்தை அவர் வெளியிட்டிருக்கின்றார்.

இறுதிப் போட்டியின்போது இங்கிலாந்து அணியும் நியூசிலாந்து அணியும் போட்டியிட்டு இருந்தன.

இந்த நிலையில் அதிக எல்லைக் கோடுகளைத் தாண்டி குவிக்கப்பட்ட எண்ணிக்கை என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு, உலகக்கிண்ண வெற்றியாளர் விருந்து அளிக்கப்பட்டது.

இந்த போட்டியின் 50 ஆவது ஓவரில் இரண்டு அணிகளும் போட்டியிட்டு கொண்டிருந்தபோது இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடி கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் 50 ஆவது ஓவரில் இங்கிலாந்து அணியின் வீரர் 2 இரண்டு ஓட்டங்களைப் பெற்ற போது விக்கெட்டை நோக்கி நியூசிலாந்து அணி வீரர்கள் வீசப்பட்ட பந்து இங்கிலாந்து அணியின் வீரரின் மட்டையில் பட்டு அது நான்கு ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்தநிலையில் அவர் ஏற்கனவே இரண்டு ஓட்டங்களைப் பெற்று விட்டார். மேலதிகமாக நான்கு ஓட்டங்களை பெற்று இருக்கின்றன. என்ற அடிப்படையில் ஆறு ஓட்டங்கள் அந்த நிலையில் வழங்கபட்டன. என்றாலும் 5 ஓட்டங்களை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று என்ற கருத்தை வெளியிடப்பட்டிருந்தது.

இதனை குமார் தர்மசேனவின் ஒரு பிழையாக இருந்தாலும் கூட தான் அதை அனைத்து நடுவர்களுடனும் இணைந்துதான் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க