ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அறிவிக்கப்படவிருக்கின்றது.
குறித்த கூட்டணி அடுத்த மாதம் 5 ஆம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் அறிவிக்கப்படும் என, கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் இந்த கூட்டணியில் ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய தொழிலாளர் ஒன்றியம் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட பல்வேறு கட்சிகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை இந்த அணியில் இணைந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தவிர சிவில் அமைப்புகள் பல்வேறு பொது அமைப்புக்கள் என்பன இந்த கூட்டணியில் இணையவிருக்கின்றன என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது.
மேலும், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விடயத்தை இன்னும் ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த கூட்டணி முடிவு எடுக்கவில்லை என்று தகவலும் வெளியாகி இருக்கின்றது
கருத்து தெரிவிக்க