உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்த கலந்துரையாடல் இன்று வவுனியாவில்

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஒழுங்கு படுத்தலின் கீழ் அரசியல் கருத்தாடல் நிகழ்வு ஒன்று வவுனியாவில் நடைபெற்று வருகின்றது.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகப் பகுதிகளில் அரசியல் ரீதியில் பொதுமக்கள் படும் அவலநிலைகளை சுமந்த கருத்தாடல் நிகழ்வு இன்று வவுனியா தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்று வருகின்றது.

இக் கருத்தாடல் நிகழ்வில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் த.வசந்தராஜா, தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர் லி.நவநீதன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், ஆகியாரின் சிறப்பு அரசியல் சமூகக் விழிப்புனர்வுகள் தாங்கிய கருத்தாடல் நடைபெற்று வருகின்றது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னால் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், முன்னால் விவசாய அமைச்சர் ஐங்கரனேசன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கலான சிவாஜிலிங்கம், லிங்கநாதன், தியாகராசா, ஈரோஸ் அமைப்பின் தலைவர் துஸ்யந்தன் ஆகியோருட்பட பொதுமக்களும் குறித்த கருத்தாடலில் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க