நாட்டின் தற்போதைய மோசமான வானிலை காரணமாக 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் நேற்று மாலை வரையில் ஏற்பட்ட சேதங்கள் , பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் தனிநபர்களின் எண்ணிக்கை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் -1317 ,தனிநபர்கள் – 5200 மரணங்கள் – 7 முற்றிலுமாக அழிக்கப்பட்ட கட்டிடங்கள் – 8 பகுதியளவில் சேதமாகிய கட்டிடங்கள் – 825, சேதமடைந்த கடைகள் – 28 என அனர்த்த முகாமைத்துவ மையத்தின் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட செயலக அலுவலகங்கள் மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான முயற்சிகளிலும் அனர்த்த முகாயமைத்துவ மையம் ஈடுபட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க