உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

‘300 தமிழ் கிராமங்கள் முஸ்லீம் கிராமங்களாகியுள்ளன’

கிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கண்ணகிபுரம் கிராமத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில்   கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 இற்கு முன்னர் இருந்த நிலை வேறு தற்போதைய நிலை வேறு தற்போது மக்களிடையே பலவிதமான சிந்தனைகள் பரவி விரவி வருகின்றன.

முக்கியமாக தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையே கடந்த காலத்தில் ஏதோ ஒரு வகையில் ஒரு சகோதரத்துவம் நிலவி வந்திருக்கின்றது என்பதில் தற்போது சந்தேகம் எழுகிறது.

முஸ்லிம்கள் இன்றும் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த தடையாக இருக்கின்றார்கள்.

இதுவரைகாலம் முஸ்லிம் மக்கள் எமது காணிகளை கொள்வனவு செய்தார்கள், அல்லது கபளீகரம் செய்தார்கள் அதனை இனி விட்டுக்கொடுக்க முடியாது.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பலவிதமாக பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

சுமார் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஒன்பதினாயிரம் தமிழ் பெண்கள் இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அத்துரலிய ரத்தினதேரர் என்னிடம் தெரிவித்தார்.

இந்த செயற்பாடு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.  எமது காணிகள், எமது பெண்கள், உரிமைகள் என்பன பறிபோகின்றன என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க