உள்நாட்டு செய்திகள்புதியவை

ஆயுதங்களுடன் ஹிக்கடுவையில் இருவர் கைது

ஹிக்கடுவையில் உள்ள வீடொன்றில் இரண்டு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (ஜூலை 19) இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நேரத்தில் 90 சுற்று வெடிபொருட்கள் அடங்கிய டி -56 ரக ஆயுதம், மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி , மூன்று புல்லட் கேசிங் ஆகியவை மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் ஹிக்கடுவையில் வசிக்கும் 40 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

கருத்து தெரிவிக்க