அஞ்சல் தொழிற்சங்க ஊழியர்கள் நாளை நள்ளிரவு 12 மணி முதல் 24 மணித்தியால சுகயீன விடுமுறையில் செல்ல தீர்மானித்திருப்பதாக தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊதியம் உட்பட மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரம் 48 மணித்தியால பணிபுறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில் அதற்கு அரசாங்கம் எவ்வித தீர்வினையும் வழங்கவில்லை என அஞ்சல் தொழிற்சங்க ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பணிபுறக்கணிப்பினால் மத்திய தபால் பரிவர்த்தனை மையத்தில் தபால்கள் தேங்கி கிடப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க