உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

பலத்த காற்றினால் விகாரை, தொடர்வீடுகள் பாதிப்பு 

சீரற்ற காலநிலை காரணமாக தெனியாய பகுதியில் உள்ள விகாரை ஒன்றும் தொடர்வீட்டு தொகுதியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பலத்த காற்றின் காரணமாக தெனியாய கந்தில்பான ஸ்ரீ ரனசிங்காராம விஹாரை மீது அருகில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் விஹாரை பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தெனியாய சின்னத்தோட்டம் லயன் அறை ஒன்றின் கூரை ஓடுகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க