முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(19) இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றாக இந்த பாடசாலை காணப்படுகின்றது.
பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் இயங்கி வருகின்ற இந்த பாடசாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளிலே (2017,2018) புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது
மாணவர்கள், விருந்தினர்கள் பாடசாலை வாயிலிருந்து மலர்மாலை அணிவித்து அழைத்துச் செல்லப்பட்டு நினைவு கேடயங்கள் பரிசில்கள் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
பாடசாலை முதல்வர் தா. தயாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆண்டிஐயா புவனேஸ்வரன் துணுக்காய் கல்வி வலயத்தினுடைய ஆரம்பக் கல்வி உதவி கல்வி பணிப்பாளர் ஜேசுதாஸ் ஜெயபிரகாஷ் துணுக்காய் கல்வி வலயத்தினுடைய அழகியல் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் என் ராஜன் துணுக்காய் கல்வி வலயத்தினுடைய ஆசிரிய ஆலோசகர்கள் அதிகாரிகள் பாடசாலையின் அதிபர் ஆசிரியர் பெற்றோர் மாணவர்கள் நலன்விரும்பிகள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
கருத்து தெரிவிக்க