உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கூட்டமைப்பு ஏமாற்றுகிறது: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

‘தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எத்தனையோ துரோகங்களை மக்களுக்கு செய்துள்ளனர் அவை அனைத்திற்கும் அவர்களிடம் சொத்துக்கள் சேர்ந்திருக்கும்’ என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

குறித்த ஊடக சந்திப்பு இன்று பிற்பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த லீலாதேவி ஆனந்தநடராஜா,

இன்று 879 நாளாக எமது தொடர் போராட்டம் இடம்பெற்ற வருகின்றது. இன்றுவரை எமது நிலை தொடர்பில் தீர்வு வஙழகுவதற்கு எவரும் முன்வரவில்லை.

இதுவரை 30 பேர்வரை தமது பிள்ளைகளை காணாதவர்களாக உயிரை மாய்த்துள்ளனர் என தெரிவித்தார்.

இந்த நிலையில் எமது அமைதிவழி போராட்டங்களை குழப்பும் வகையில் எமது கோவில்கள் ஆக்கிரமிக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் எழுந்து வருகின்றது.

இவை திட்டமிட்டு எம்மீது திணிக்கப்படுகின்றமையை உணர்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்மை ஏமாற்றிவிட்டது. அவர்கள் தமது சுயநலம் சார்ந்து செயற்படுகின்றனர்.

இந்த நிலையில் எமது பிள்ளைகளின் விடிவிற்காகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் பேசுவதற்கு ஓர் பொது அணி தேவைப்படுகின்றது.

அவ்வாறு அனைத்து தரப்பும் ஓரணியில் திரண்டு செயற்படுவதே பொருத்தமானது என அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க