இலங்கையில் டெங்கு காய்ச்சல் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரஜை ஒருவரின் குடும்பத்தினர், அவரை நாட்டிற்கு மீண்டும் அழைத்துச் செல்ல தேவையான நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வைட்ஸைட் எனப்படும் குறித்த நபர் இலங்கையில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் நிமோனியா மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் என்று குறிப்பிடப்படுகின்றது.
ஐரோப்பா முழுவதும் பயணம் செய்த 52 வயதான இவருக்கு இப்போது ஒருவகை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது – அதாவது அவர் முடங்கியுள்ள நிலையில் கண்களை மட்டுமே சிமிட்ட முடியும் என வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க