உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

‘முப்படையினர் நாட்டுக்கெதிராக எப்போதும் செயற்பட்டதில்லை’

பல்வேறு அரசியல் ரீதியான சிக்கல்களை சந்தித்த காலகட்டத்திலும் , எமது நாட்டின் முப்படையினரும் காவல் துறையினரும் எந்தவொரு காலகட்டத்திலும் இராணுவ சதிப்புரட்சியையோ, அல்லது ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளையோ மேற்கொள்ளவில்லை என, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தலைநகரான வோஷிங்டனில் கடந்த 3 தினங்களாக இடம்பெற்ற, ஜனநாயக தேசிய நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த, நாடாளுமன்ற தலைமைத்துவப் பண்புகள் தொடர்பான கருத்துகளத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எமது நாட்டில் முப்படையினரும் காவல் துறையினரும் ஜனநாயக விழுமியங்களை பேணி பாதுகாப்பதில் அக்கறை காட்டும் தரப்பினராக உள்ளனர் .

அத்துடன், உலகலாவிய ரீதியில் இளைஞர் யுவதிகள் அரசியலில் அக்கறைக் காட்டுவதில்லை என தெரிவித்த அவர், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கையில் இடம்பெற்ற ஜனநாயக ரீதியிலான சதி குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்காலப்பகுதிலும் கூட முப்படையினரும் காவல்துறையினரும் ஜனநாயகத்தை பேணி காப்பதில் அக்கறையுடன் செயற்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க