வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள படையினரின் சோதனைச்சாவடியால் தினமும் பயணிகள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
எங்கேயோ குண்டு வெடித்ததற்கு இங்கு சோதனைச்சாவடிகளை அமைத்துள்ளனர்.
தற்போதுள்ள நிலைமைகளில் இச் சோதனைச்சாவடி பேருந்து நிலையப்பகுதியில் தேவையற்றதே இதனை உடனடியாக அகற்றுமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
இவ்வாறு இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் சந்தித்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து பாதுகாப்புத்தரப்பினருக்கு நாங்கள் கடுமையான அழுத்தம் பிரயோகிக்க முடியாது. ஆனால் தற்போது ஆட்சியாளர்களாக இருக்கின்றவர்கள் இது குறித்து பேசமுடியும்.
இவ்விடயங்களில் சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து ஒரு முயற்சி மேற்கொள்ளவேண்டும் எங்கேயோ குண்டுகள் வெடித்ததற்காக இங்கே பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பொதுமக்களுக்கு இடையூறுகளையும் அதிகளவில் ஏற்படுத்தியுள்ளார்கள்.
இதனைப் பேசும்போது நாங்கள் பாதுகாப்புத் தரப்பினரை குறை கூறுவதாக அமைந்து விடக்கூடாது.
தற்போது நிலைமைகள் சீராகி வருகின்றது. எந்தப்பகுதிகளிலும் இவ்வாறான பாரிய சோதனைகள் காணப்படவில்லை இதனால் மக்களுக்கு பாரியளவில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன.
இச் சோதனை சாவடியினை புதிய பேருந்து நிலையப்பகுதியிலிருந்து உடனடியாக அகற்றி பொதுமக்களுக்கு இடையூறுகள் இன்றி தமது பயணங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கைவிடுக்கின்றேன் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க