த நேஷன் செய்தித்தாளின் முன்னாள் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒன்பதாவது சந்தேக நபரான இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் கோப்ரல் லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கல்கிசை நீதிவான் நீதிமன்றில் இன்று ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் நீதிவான் சி.எச்.வீ.லியனகேவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை ஓகஸ்ட் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் அன்றைய தினம் அடையாள அணி வகுப்புக்குட்படுத்த வும் நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் அறிவித்துள்ளார்.
முன்னாள் கோப்ரல் லலித் ராஜபக் ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் தாக்குதல் தொடர்பில் ஏலவே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஊடகவியலாளர் கீத் நொயார் விவகாரத்தில் தொடர்புப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் தாக்கப்பட்ட வாகனத்தில் உள்ள கைரேகைகள் இராணுவ முன்னாள் கோப்ரலின் கைரேகைகளுடன் ஒத்து போவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க