உள்நாட்டு செய்திகள்புதியவை

தொடர்கிறது அஞ்சல் சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு

அஞ்சல் சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் இடம்பெறுகின்றது.

அஞ்சல் சேவை பணியாளர்களுக்கும் அமைச்சர் அப்துல் ஹலீமுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இந்த சேவை புறக்கணிப்பு தொடர்கின்றது.

ஏற்கனவே திட்டமிட்டபடி 48 மணி நேர போராட்டமானது நாளை மாலை 4 மணி வரையில் தொடரும் என அஞ்சல் சேவையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அஞ்சல் பணியாளர்களின் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அஞ்சல் ஊழியர்களின் கூட்டு இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த பணி புறக்கணிப்பு காரணமாக கொழும்பு தபால் மத்திய பரிவர்த்தனை நிலையத்தில் சுமார் 2 மில்லியன் அஞ்சல்கள் தேங்கி நிற்பதாக குறிப்பிட
ப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க