இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தமது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையொன்றின் மூலம் இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஐக்கிய தேசிய கட்சியினர், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை சந்தித்தபோதே இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மரண தண்டனை மிகவும் கொடூரமான ஒன்றாக பாதிக்கப்படுவதாகவும் எனவே மரண தண்டனை தொடர்பில் இலங்கை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் மரண தண்டனை அமல்படுத்துவது ரத்து செய்யப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
கருத்து தெரிவிக்க