உள்நாட்டு செய்திகள்புதியவை

இலங்கையின் பல பகுதிகளில் காட்டு தீ பரவும் அபாயம்

இலங்கையில் நிலவும் உஷ்ணத்துடன் கூடிய காலநிலையினால் காடுகள் தீப்பற்றி எறியக்கூடும் அபாயம் நிலவுவதாக இலங்கையின் தகவல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

பொதுவாக பதுளை, மொனராகலை, நுவரெலிய, அனுராதபுரம் பொலன்னறுவை போன்ற பகுதிகளில் காட்டுத்தீ பரவிவருகின்றது.

இந்த பிராந்தியங்களில் பைன் மற்றும் யூகலிப்டஸ் வகை மரங்கள் வளர்ந்து வருவதால் அவை இலகுவில் தீ பற்றும் வாய்ப்பை ஏற்படுத்துகின்றன.

மனித செயற்பாடுகளே காட்டுத்தீ பரவலுக்கு முக்கிய காரணமாக உள்ளது என திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

விவசாயம் செய்வதற்காக மற்றும் சிகரெட் முனைகளின் மூலம் விரைவில் தீப்பிடிப்பதாக திணைக்களம் தெரிவிக்கிறது.

கருத்து தெரிவிக்க