திருகோணமலை – கன்னியாவில் பொலிஸ் பாதுகாப்பில் சென்ற தென் கைலை ஆதீனம் மற்றும் பிள்ளையாா் ஆலய உாிமையாளா் ஆகியோா் மீது எச்சில் தேனீா் ஊற்றப்படும் போது பொலிஸாா் பாா்த்துக் கொண்டிருந்ததாகவும், காடையா்களை கட்டுப்படுத்தவோ, கைது செய்யவோ அவா்கள் முயற்சிக்கவில்லை எனவும் பொது அமைப் புக்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனா்.
கன்னியா வென்னீரூற்று பகுதியில் பிள்ளையாா் ஆலயத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் பௌத்த விகாரை கட்டப்படுவதை கண்டித்து அடையாள ஊா்வலம் ஒன்றையும் விசேட வழிபாடு ஒன்றையும் தென் கைலை ஆதீனம் ஒழுங்கமைத்திருந்தது.
இதனை அடுத்து நீதிமன்ற தடை உத்தரவை பெற்ற பொலிஸாா், கலக தடுப்பு பொலிஸாா் மற்றும் இராணுவத்தினரை களமிறக்கி மக்களுடைய வழிபாட்டு உாிமையை தடை செய்திருந்தனா்.
இதன்போது பௌத்த பிக்கு ஒருவா் மற்றும் பொலிஸாா் முன்னிலையில் பிக்குவுடன் நின்ற காடையன் ஒருவன் தென் கைலை ஆதீனம் மீதும், பிள்ளையாா் ஆலய உாிமையாளா் கோகில றமணி அம்மையாா் மீதும் எச்சில் தேனீரை ஊற்றி அவமானப்படுத்தியிருந்தாா்.
இந்த விடயத்தை கண்டித்து ஜக்ரத சைத்தன்ய சுவாமிகள் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் யாழ். ஊடக அமையத்தில் நேற்று ஊடகவியலாளா்களை சந்தித்து கருத்து தொிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளனா்.
இதன்போது மேலும் அவா்கள் கருத்து தெரிவிக்கையில், அமைதியான முறையில் அடையாள ஊா்வலம் ஒன்றையும் விசேட வழிபாட்டையும் நடாத்த தீா்மானித்திருந்தோம். இதற்காக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து பெருமளவு இளைஞா்கள் ஒன்று கூடியிருந்தனா். இந்நிலையில் நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து கன்னியா பகுதிக்குள் நுழைவதற்கு 500 மீற்றா் முன்பாகவே எங்களை தடுத்தனா்.
நாங்கள் மிக நாகாிகமான முறையில், அமைதியாக எங்களுடைய நிலைப்பாட்டையும், எங்களுடைய உாிமை மறுக்கப்படுவதையும் கூறினோம். மேலும் பொலிஸாா் காட்டிய நீதிமன்ற தடையுத்தரவில் பௌத்தா்களின் சைத்தியம் அமைந்திருந்த இடம் எனவும், அங்கே தமிழா்கள் ஆக்கிரமிப்பு செய்ய வருகிறாா்கள் எனவும் கூறப்பட்டிருந்தது. அதனை நாங்கள் நிராகாித்து எமது தரப்பு நியாயங்களை கூறினோம்.
ஆனாலும் எங்களுடைய கருத்துக்கள் அல்லது எங்கள் பக்க நியாயங்கள் கருத்தில் எடுக்கப்படவில்லை. இதன் பின்னா் எங்களோடு இருந்த இளைஞா்கள் சிலா் சிங்கள மக்கள் உள்ளே செல்லலாம், வழிபடலாம் என்றால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது எதற்காக? என கேள்வி எழுப்பியிருந்தனா்.
இதனை அடுத்து தாங்கள் சிங்கள மக்களை உள்ளே விடவில்லை. வேண்டுமானால் இருவா் வாருங்கள் கட்டலாம் என கூறினா்.
ஆனால் இருவரை அனுப்ப முடியாது. 5 போ் வருகிறோம் என கேட்டபோது, அது நிராகாிக்கப்பட்டு தென் கைலை ஆதீனம் மற்றும் பிள்ளையாா் ஆலய உாிமையாளா் கோகில றமணி அம்மையாா் ஆகிய இருவரும் பொலிஸாா் தாம் பாதுகாப்பு வழங்குவதாக கூறியதன் அடிப்படையில் உள்ளே அழைத்து செல்லப்பட்டனா். இந்நிலையில் உள்ளே சென்ற தென் கைலை ஆதீனம் மற்றும் கோகில றமணி அம்மையாா் ஆகியோா் இடையில் மறிக்கப்பட்டு அங்கிருந்த பௌத்த பிக்கு மற்றும் அவருடன் நின்றிருந்த சுமாா் 20 ற்கும் மேற்பட்ட காடையா்களினால் கடுமையான வாா்த்தை பிரயோகங்களி னால் திட்டி தீா்கப்பட்டுள்ளனா்.
பின்னா் வாகனத்தில் இருந்த அவா்கள் மீது கன்னியா சுற்றாடலில் சிற்பி விற்பனை செய்யும் குமார என்ற காடையா் தான் குடித்துக் கொண்டிருந்த எச்சில் தேனீரை ஊற்றியுள்ளாா். இதனை அங்கிருந்த பொலிஸாா் நேரடியாக பாா்த்துக் கொண்டிருந்தனா்.
மேலும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்கப்பட்ட போதும் அவா்கள் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. பின்னா் தென் கைலை ஆதீனம் உள்ளிட்டவா்கள் வெளியே வந் து நடந்த விடயத்தை கூறிய போதும் மக்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என மக்கள் கேட்டனா். ஆனால் தென் கைலை ஆதீனத்தை வைத்தியசாலையில் சேருங்கள் அல்லது முறைப்பாடு கொடுங்கள் என கூறியதுடன், அங்கிருந்து ஒதுங்கி நின்றுவிட்டாா்கள்.
எனவே இவ்வாறான சம்பவத்தை கண்டிப்பதுடன், இவ்வாறான சம்பவங்கள் தொடா்பாக இந்து சமய தலைவா்கள் ஒன்றிணைந்து இந்தியாவுடன் பேசுவதற்கும், இந்தியா வில் உள்ள இந்து சமய அமைப்புக்களுடன் பேசுவதற்கும் தீா்மானித்துள்ளோம். அதேபோல் இந்து சமய அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் அரசியல்வாதிகளை சந்தித் து இந்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்கும் நாங்கள் தீா்மானித்துள்ளோம்.
மேலதிகமாக இலங்கையில் இந்து சமய உயா்பீடம் ஒன்றை உருவாக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்றனா்.
[ நிருபர் தம்பிராஜா பிரதீபன் ]
கருத்து தெரிவிக்க