உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

இனவாதம் தலைதூக்கியது – கந்தபொல நகரில் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா – கந்தபொல கோட்லோட்ஜ் (Court Lodge) தோட்டத்தின் மலைப் பகுதியில் அமைந்திருந்த முனி தெய்வத்தின் சிலைகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பௌத்த கொடியை நாட்டியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்று கந்தபொல நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றிருக்கிறது.

கோட்லோட்ஜ் மக்களும் அதே போல போஸ்டூட் (Postoot) தோட்ட மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

நேற்று குறித்த தோட்டத்தில் அமைந்திருக்கின்ற விகாரையின் பௌத்தத் துறவியும் அதேபோல கந்தபொல நகரின் காவல்துறை பொறுப்பதிகாரியும் சென்று தான் இந்த சிலையை அகற்றி விட்டு அதற்காக பௌத்த கொடியை நாடியதாக சொல்லப்படுகின்றது.

எனவே இனவாதமாக செயற்பட்டதன் காரணத்தினால் குறித்த காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்க்கு சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் வருகை தந்தனர்.

இதனை அடுத்து இந்த காவல்துறை பொறுப்பதிகாரி உடனடியாக மாற்றுமாறு கோரி தோட்ட மக்களால் நுவரெலிய காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒரு முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

இனவாதமாக செயற்பட்டார் என்ற அடிப்படையிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும், முறைப்பாட்டின் பின்னர் இந்த போராட்டம் முடிவுக்கு வந்திருக்கின்றது.

கருத்து தெரிவிக்க