உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவருக்கு சொந்தமான செப்பு தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியரை ஜூலை 29 வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (ஜூலை 15) வெளியிட்டது.
பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லா, 9 தொழிலாளர்களுடன் கைது செய்யப்பட்டார். ஏனையோருக்கு பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
ஏப்ரல் 21 ம் திகதி ஷாங்க்ரி-லா விடுதியில் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட இல்ஹாம் இப்ராஹிமுக்கு சொந்தமான செப்பு தொழிற்சாலையில் அப்துல்லா பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க