வவுனியா குருமன்காடு ஸ்ரீவிநாயகர் தேவஸ்தான வருடாந்த தேர்திருவிழா வெகுசிறப்பாக இன்று இடம்பெற்றது.
[07.07.2019] அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவப் பெருவிழாவின் 10ம் நாளான இன்று காலை 10.00 மணியளவில் பஞ்சமுக விநாயகர் தேர் உள்வீதி வலம் வந்தது.
மேலும், அடியார்கள் அங்கபிரதட்சினை, மற்றும் கற்பூர சட்டி என்பவற்றை ஏந்தி தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர்.
இதேவேளை, காலை 11.30 மணியளவில் தேர் இருப்பிடத்தை வந்தடைந்ததை தொடர்ந்து அர்ச்சனைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க