சினிமா

இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடிய சித் ஸ்ரீராம்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் திரைப்படம் சைக்கோ. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் ஹிதாரி ஆகியோர் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி இயக்குனர் ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் இப்படத்தை உல்ஃப் புரெடக்சன்ஸ் தயாரிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். அதனடிப்படையில் இப்படத்தின் கடைசிப் பாடலுக்கான ஒலிப்பதிவு வேலைகளும் நிறைவு பெற்றுள்ள நிலையில், படத்தின் ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் இதுபற்றி தனது வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இளையராஜாவின் இசையில் பிரபல பின்னணிப் பாடகர் சித்ஸ்ரீராமே கடைசிப் பாடலை பாடியுள்ளதாகவும், மிஷ்கின் மற்றும் இசைஞானியின் கூட்டணி படத்தை வேறுநிலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க