அரசியலுக்கு அப்பால் தமிழ் மக்களின் வாழ்வியல் நகர்வுகளை முன்னெடுக்கும் நோக்கில் மன்னார் மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட ‘தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின்’ அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் வைபவ ரீதியாக தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கமானது சிவில் சமூக ஆர்வளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ,மத குருக்கள் மற்றும் தமிழர் வாழ்வுரிமை இயக்கத்தின் அங்கத்தவர்கள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.
இயக்கத்தின் செயற்பாடுகள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டது.
அத்துடன் எதிர் வரும் காலங்களில் தமிழர் வாழ்வுரிமை இயக்கம் மாவட்ட , பிரதேச , கிராம ரீதியில் ஜனநாயக ரீதியில் மேற்கொள்ள இருக்கும் அரசியல் ,சமூக,கலாச்சார விழிர்ப்புணர்வு கருத்தமர்வுகள் ,துண்டுப்பிரசுர விநியோகம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மக்களின் நிலம், உரிமை , காணாமல் ஆக்கப்படோர் விடயம் , அரசியல் கைதிகள் தொடர்பான விடயங்களில் முன் நின்று செயற்படஉள்ளதாக குறித்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க