கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் நிலவும் வறட்சி காரணமாக 642 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும் கண்டாவளைப்பிரதேச செயலர் த.பிருந்தாகரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியுடனான காலநிலை காரணமாக கண்டாவளை மற்றும் பூநகரி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இவ்வாறு குடிநீர் தேவையுள்ள பகுதிகளுக்கு பிரதேச செயலகம் ஊடாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
‘கடும் வறட்சி நாள் ஒன்றுக்கு கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கண்ணகைபுரம் அம்பிகை வித்தியாலயம் நாகேந்திரபும் நாகேந்திரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் உள்ளடங்கலாக குடிநீர்த் தேவையுள்ள பகுதிகளுக்கு நாளாந்தம் 38 ஆயிரம் லீற்றர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குடிநீருக்காக வழங்கப்படும் நீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
கருத்து தெரிவிக்க