உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

தேர்தல் வன்முறையை கண்காணிக்கும் மையத்தினால் கலந்துரையாடல்

தேர்தல் வன்முறையை கண்காணிக்கும் மையத்தின் ஏற்பாட்டில் தேர்தல் பிரசார நிதியாக்கம் தொடர்பான பொதுக் கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

தேர்தல் செயற்பாட்டினை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடாத்துவதற்கு அவசியமான மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு தேர்தலுல் செலவுகள், தொடர்பான விளக்கம் வாக்காளர்களுக்கு இருக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தி இவ்வாறான பொதுக் கலந்துரையாடல் நாடெங்கிலும் நடாத்தப்பட்டு வருவதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

இதில், சுதந்திரமானதும் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலுக்காக செயற்படுகின்ற ஆர்வலர்கள் சுமார் 125 பேர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முஹம்மத், மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் உதவி ஆணையாளர் ஆர். சசீலன், பப்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் ஆணையாளர் ரோஹண ஹெட்டியாராச்சி, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்hளர், மாகாண இணைப்பாளர் ஏ.எம்.என் விக்ரர், மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவர் ஷிராணி ஜனன், மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய மாவட்ட இணைப்பாளர் எஸ்.பி. பிரசன்யா, உட்பட இன்னும் பல அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க