ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கில்லஸ் டி கெர்ச்சோவ் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
ஒருங்கிணைப்பாளர் கில்லஸ் டி கெர்ச்சோவ் இலங்கை மற்றும் மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
விஜேராம வீதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதில் ஸ்ரீலங்கா பொடுஜன பெரமுன தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ராஜபக்ஷ, தாம் பதவியில் இருந்தபோது தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்ததாகவும் தற்போது அரசாங்கத்திற்கு அதிகபட்ச ஆதரவை அளித்து வருவதாகவும் இதன் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியிடம், குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க