மரணதண்டனை அமுலாக்கத்தை இரத்து செய்ய நாடாளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவரப்படும் தினம் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ள நிலையில் அதற்கு ஐ.தே. க உட்பட பல கட்சிகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இதேவேளை உச்ச நீதிமன்றம் மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு இடைக்கால தடை உத்தரவை பிறந்துள்ளது.
இந்நிலையில் மரண தண்டனை ரத்து செய்ய பிரேரணை முன்வைக்கும் நாளை துக்க தினமாக பிரகடப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இலங்கையில் மரண தண்டனைகள் விதிக்கப்படுகின்ற போதும் 1976ஆம் ஆண்டு முதல் இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
கருத்து தெரிவிக்க