சீனாவின் ரோலிங்-ஸ்டொக் தயாரிப்பு நிறுவனம் இலங்கைக்கு ஒன்பது டீசல் தொடருந்துகளை தயாரித்துள்ளது என்று சீன செய்தி நிறுவனம் (the Xinhua news) தெரிவித்துள்ளது.
இந்த புதிய தொடருந்துகளில் 90 வகை தொகுதிகள் பொருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த தொடருந்து தயாரிப்பு செயற்பாடுகள் குறித்த நிறுவனத்தின் நான்காவது தொகுதி ஆகும்.
இந்த தொடருந்துகளானது மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தற்போது இலங்கையில் பயன்படுத்தப்படும் தொடருந்துகளுடன் ஒப்பிடும்போது, அதிக குளிரூட்டல் வசதி, மேம்படுத்தப்பட்ட பயணிகள் தகவல் அமைப்பு முறைமை, எல்சிடி டிவி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட கழிப்பறைகள் போன்ற வசதிகள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க