தற்போது நிலவும் மழையுடனான காலநிலையினால் டெங்கு நுளம்புகள் அதிகரித்துள்ளமையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த மாதத்தில் மாத்திரம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேற்கு, தெற்கு, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களும், கண்டி மாவட்டமும் டெங்கு அனர்த்தம் கூடுதலாக உள்ள வலயங்களாக அடையாளப்படுத்த முடியும் என்று சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு தேசிய பிரிவு தெரிவித்துள்ளது.
நுளம்புகள் பெருகக் கூடிய இடங்கள் தொடர்பில் கூடுதலாக கவனம் செலுத்தி அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கருத்து தெரிவிக்க